திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-20 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் நியமனம் செய்வது குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு, ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.

இக்கூட்டத்தில், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஆர்.கே.எம்.எஸ்.சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்