திமிரி ஒன்றியக்குழு கூட்டம்
திமிரி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் அசோக் தலைமையில் நடந்தது.
திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தூய்மை பணிகள், கூட்டுக் குடிநீர் திட்டம், சாலை வசதி போன்ற அடிப்படை திட்டங்களுக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் தன்ராஜ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.