கனரக லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு தகவல் பலகை

கனரக லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு தகவல் பலகை வைக்கப்பட்டது.

Update: 2023-08-01 18:45 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் பகுதியில் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்காத கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் பகுதியிலும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் நகர எல்லையில் சின்னவளையம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு பெயர் பலகையும், தா.பழூர் கே.கே.சி கல்வி நிறுவனத்திற்கு முன்பாக ஒரு பெயர் பலகையும், துளாரங்குறிச்சி எல்லையில் ஒரு பெயர் பலகையும், செந்துறை பிரிவு ரோடு பகுதியில் ஒரு பெயர் பலகையும், நகருக்குள் அண்ணா சிலை, தா.பழூர் பஸ் நிறுத்தம், விநாயகர் கோயில் அருகில், அம்பேத்கர் சிலை அருகில் என மொத்தம் 8 இடங்களில் நேரக்கட்டுப்பாடு குறித்த தகவல் பலகை அமைக்கப்பட்டது. அதில் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், அதேபோல் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனை மீறி கனரக வாகனங்களை இயக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. எச்சரிக்கை பெயர் பலகை ஸ்ரீ பாலாஜி பவன் ஓட்டல் சார்பில் மாணவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பலகையை ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ஸ்ரீ பாலாஜி பவன் ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீகாந்த், போக்குவரத்து போலீஸ் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்