புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொள்ளாச்சி
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகள் பாதுகாப்பு, வனங்களில் புலிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் அவசியம் குறித்து அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம், பொள்ளாச்சி வனச்சரகம், கோவை வன உயிரின மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை சார்பில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பகுதியில் பேரணி மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. பின்னர் நடந்த நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புலிகளின் முக்கியத்துவம், வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. இதில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.