வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-05-13 19:00 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்தராஜ் (வயது 26). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) மற்றும் சிலர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக ஆனந்தராஜை வழிமறித்து தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சந்திரன் உள்பட 3 பேரை வடபாகம் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் சந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சந்திரனை வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்