வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாங்குநேரியில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-12-12 19:15 GMT

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் சங்கர் என்ற குட்டசங்கர் (வயது 24). இவர் நாங்குநேரி பகுதியில் அடிதடி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சங்கரை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று சங்கரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் சமர்ப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்