சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம்

சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-07-08 12:25 GMT

அடுக்கம்பாறை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32), சாராய வியாபாரி. இவர், வேலூர் தாலுகா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் சாராயம் விற்றபோது இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ராஜ்குமார் மீது ஏற்கனவே சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ராஜ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் ராஜ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்