3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சிவகங்கையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-11-01 18:45 GMT

சிவகங்கையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டர் சட்டம்

சிவகங்கை அடுத்த வைரம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா (வயது 30). இவர் கடந்த ஜூலை மாதம் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருப்புவனம் புதூரை சேர்ந்த ரிஷி குமார் (20), பரணி குமார் (20), கார்த்திக் ராஜா (19), ஆவரங்காடு பகுதியை சேர்ந்த ராஜமருது (20), தினேஷ் (22), தங்கராஜ் (25) உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ராஜமருது, தினேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் கூலிப்படையினராக செயல்பட்டு வந்துள்ளனர். எனவே இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்ற கலெக்டர் மதுசூதன்ரெட்டி அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 48 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் கொலை, கொள்ளை, பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்