மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மூலம் ரூ.8,275 கோடி கடன் வழங்க இலக்கு: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மூலம் ரூ.8 ஆயிரத்து 275 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-11-04 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) சார்பில் கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார். கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பேசும்போது, "தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் சார்பில், தேனி மாவட்டத்தில் செயல்படும் வங்கிகளின் மூலம் 2023-24-ம் நிதியாண்டுக்கு ரூ.8,275 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் வேளாண்மை மற்றும் இணை தொழில்களுக்கு ரூ.6,600 கோடியும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,000 கோடியும், மீதமுள்ள தொகை முக்கிய திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் அசோகன், நபார்டு வங்கி மேலாளர் சக்திபாலன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்