காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது.

காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது.

Update: 2022-11-08 16:48 GMT

காங்கயம்,

காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது.

கொழுக்கட்டை புற்கள்

காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது.

இதனால் கால்நடைகளுக்கு தீவனப்பிரச்சினை தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை விவசாயிகள் பச்சை அல்லாத காய வைக்கப்பட்ட வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்டவற்றை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தனர்.

தற்போது மழை பெய்து மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் கால்நடைகளை மேய்ச்சல் நிலத்தில் மேய விட்டு வருகின்றனர். இதனால் தீவனப்பிரச்சினை தீர்ந்துள்ளது. இந்த கொழுக்கட்டை புற்களை கறவை மாடுகள் உண்பதால் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

பால் உற்பத்தி அதிகரிப்பு

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-

சமீப காலமாக தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டதால் விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். இது லாபகரமான தொழில் இல்லை என்றாலும் ஓரளவு வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும் தொழிலாக உள்ளது. நாங்கள் உற்பத்தி செய்யும் பாலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கொள்முதல் மையங்களிலும், தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் மையங்களிலும் வினியோகம் செய்து வருகிறோம்.

சமீப காலங்களில் பரவலாக பெய்த மழையால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் மாடுகளுக்கு நல்ல மேய்ச்சல் கிடைக்கிறது. இதனால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. வழக்கமாக 1 லிட்டர் பால் கொடுக்கும் மாடு தற்போது 2 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு பால் வரத்தும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்