வானில் தோன்றிய வெண்ணிற பிம்பங்களால் பரபரப்பு

கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் வானில் தோன்றிய வெண்ணிற பிம்பங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-22 21:00 GMT

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான், தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு வானில் திடீரென்று வெண்ணிற ஒளியில் பிரமாண்ட பறவை, திமிங்கலம், மீன் போன்ற பிம்பங்கள் தென்பட்டன. அவைகள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தவாறு அதிக வெளிச்சத்துடன் தோன்றியதை ஏராளமானவர்கள் வியப்புடன் பார்த்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. கயத்தாறு பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவிலும் வானில் இதேபோன்று வெண்ணிற வடிவில் பல்வேறு பிம்பங்கள் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்