விழுப்புரம் சிறையில் இருந்து வந்தவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

விழுப்புரம் சிறையில் இருந்து வந்தவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-30 16:45 GMT


விழுப்புரம் அருகே வேடம்பட்டில் உள்ள மாவட்ட மத்திய சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ளனர். இந்நிலையில் முகையூரை அடுத்த வி.புத்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த நபர், சிறை வளாகத்தில் இருந்து வெளியில் வரும்போது தனது சட்டையின் காலரை தூக்கிவிட்டவாறு செல்போனில் வீடியோவை பதிவு செய்தும், ஒருவரை டியூப்லைட் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்குவது போன்றும் நடித்துள்ளார். அந்த நபர், தனது வாழ்க்கையில் ஒரு பெரிய ரவுடி ஆவதே தனது லட்சியம் என்பதை தெரிவிக்கும் விதமாக இருந்த அந்த வீடியோ, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்