மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம்-வைகோ வழங்கினார்

கலிங்கப்பட்டியில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனத்தை வைகோ வழங்கினார்.

Update: 2022-06-11 16:11 GMT

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி வைகோவின் இல்லத்தில் வைத்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திருமலாபுரம் ஊரைச் சேர்ந்த பட்டதாரி மாற்றுத்திறனாளியான மாரிச்சாமி என்பவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை அதிகாரி ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குருவிகுளம் வடக்கு சீனிவாசன், வாசுதேவநல்லூர் கிருஷ்ணகுமார், கீழப்பாவூர் வடக்கு ஆறுமுகச்சாமி, ஆலங்குளம் வடக்கு மருதசாமி, மேலநீலிதநல்லூர் டாக்டர் ரவி, குருவிகுளம் கிழக்கு ராஜகோபால், வழக்கறிஞர் சுப்பையா பாண்டியன், முருகன், திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பாலமுருகன், நகரச் செயலாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அருள்குமார், கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


Tags:    

மேலும் செய்திகள்