பள்ளியில் முப்பெரும் விழா

முக்கூடல் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

Update: 2023-04-09 18:45 GMT

முக்கூடல்:

முக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளிக்கூட ஆண்டு விழா, விளையாட்டு விழா, மேலாண்மை குழு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சபரி கிரிநாத் வரவேற்றார். மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியில் மாணவர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் பரிசுகளை வழங்கினார். பேரூராட்சி துணை தலைவர் லட்சுமணன், பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் ஜோசப் கிரிகோரி, பொதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமணி, இடைகால் சாரதா பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி காந்தி, நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், முக்கூடல் சொக்கலால் சத்திரிய வித்யாசாலா பள்ளி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்