முப்பெரும் விழா

திண்டுக்கல்லில் ம.தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

Update: 2023-06-04 19:00 GMT

திண்டுக்கல் நகர ம.தி.மு.க. சார்பில் 30-வது ஆண்டு தொடக்க கொடியேற்று விழா, 4-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட செல்வராகவனுக்கு பாராட்டு விழா, கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழா திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு நகர செயலாளர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பிச்சை, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, துணை செயலாளர்கள் பொன்.செல்வராஜ், காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செல்வராகவன் கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். அதையடுத்து புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த விழாவில் 48-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி ஜெயவீரன், மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், ராஜேந்திரன், கண்ணன், திருப்பதிராஜ், மதலேன் மரியாள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்