மீனாட்சிபுரம் நூலகத்தில் முப்பெரும் விழா
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் நூலகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டம் சார்பில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள் விழா, டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் தலைவர் சரவணகுமார் வரவேற்றார். கணபதி சுப்பிரமணியன், கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயன் ரமேஷ் ராஜா தலைமை தாங்கி நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். நல் நூலகர் முத்துகிருஷ்ணன், புரவலர் தம்பான், கவிஞர்கள் முத்துசாமி, சக்தி வேலாயுதம், பிரபு, சிற்பி பாமா, சுரேஷ், சுப்பையா மற்றும் இசக்கிகுமாா், காளிராஜன், சுப்பிரமணியன், முத்துக்கிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். கிளை நூலகர் அகிலன் முத்துக்குமார் நன்றி கூறினார்.