3 போலி டாக்டர்கள் கைது

ஒரத்தநாடு பகுதியில் முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்்சை அளித்த 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-07 22:01 GMT

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு பகுதியில் முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்்சை அளித்த 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்

உயர் அதிகாரிகளுக்கு புகார்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் முறையான மருத்துவ படிப்பின்றி சிலர் ஆங்கில மருத்துவ முறையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் திலகம் அறிவுறுத்தலின் பேரில் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் (பொறுப்பு) வெற்றிவேந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் போலீசாரின் உதவியுடன் நேற்று ஒரத்தநாடு பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

3 போலி டாக்டர்கள் கைது

ஆய்வின்போது ஒரத்தநாடு தெற்கு வாணியத் தெருவில் முறையான மருத்துவ படிப்பின்றி ஆங்கில மருந்து -மாத்திரைகளை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பனையக்கோட்டையை சேர்ந்த முகுந்தன் (வயது61), ஒரத்தநாடு வடக்கு வாணியத்தெருவில் முறையான மருத்துவ படிப்பின்றி ஆங்கில மருந்து மாத்திரைகளை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (64) மற்றும் பாப்பாநாட்டில் கரம்பயம் மணிமொழி நகரை சேர்ந்த மூக்கையன் (50) ஆகிய 3 பேரையும் டாக்டர் வெற்றிவேந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்து ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து டாக்டர் வெற்றிவேந்தன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகுந்தன், செல்வராஜ், மூக்கையன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்