பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-17 15:19 GMT


ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் காளிதாஸ் மகள் கனிமொழி (வயது24). இவருக்கும் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த சிவக்குமார் (30) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்து உள்ளது. திருமணத்திற்கு பிறகு பிரிட்ஜ், 40 பவுன் நகையும் கேட்டு சேர்ந்துவாழ வில்லையாம். இதுகுறித்து கனிமொழியின் பெற்றோர் கேட்கச்சென்றபோது சிவக்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்களாம். இதுகுறித்து கனிமொழி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்