திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-30 19:30 GMT

காரைக்குடி,

காரைக்குடி செக்காலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் குமார் (வயது 25). இவருக்கும், காரைக்குடி பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் வேலை செய்து வரும் 25 வயது பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில் பிரகாஷ் குமார் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அவர் நாம் நண்பர்களாகதான் பழகினோம், எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறியுள்ளார். ஆனால் பிரகாஷ் குமார் என்னை திருமணம் செய்யவில்லை என்றால் உன்னை யாரையும் திருமணம் செய்ய விட மாட்டேன் எனவும், குடும்பத்தோடு கொன்று விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் குமாரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்