ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

கீழ்ப்பாடி கிராமத்தில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT

ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் ஒன்றியம் கீழ்ப்பாடி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி, வானவில் மன்றம் இணைந்து ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. விழாவில் வானவில் மன்ற ஆசிரியர்கள் தேவேந்திரன், ஜெசி, சாலமோன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மூடநம்பிக்கையில் இருந்து வெளிவரவும், மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை வளரவும், கணிதத்தில் சிறந்த மாணவர்களாக உருவாகவும் பயிற்சி அளித்தனர். மேலும் நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் மாலா, மகேஸ்வரி, உமா, செண்பகம், பிரியா, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்