ரெயில் மறியல் செய்ய முயன்றவர்கள் கைது
ரெயில் மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்படி ராமநாதபுரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலாளர் வசந்த் சுர்ஜித் தலைமையில் நிர்வாகிகள் ராகுல், சுரேந்தர்கவி உள்பட ஏராளமானோர் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். இவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் மறித்து கைது செய்தனர்.