கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உருமாறிய வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்.

Update: 2022-06-07 22:13 GMT

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 235 மாணவர்களுக்கு சோதனை நடத்தியதில் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த மாணவ, மாணவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டார்.அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், 'தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தற்போதைய உருமாறிய வைரஸ் நோய் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என மருத்துவ வல்லுனர்களே தெரிவித்திருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில-மாவட்ட மாணவர்கள் என்பதும், குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கே இத்தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்