தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி
வரவேற்றார். இதில் துணைத்தலைவர் உமாமகேஸ்வரி, நகர் மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜுலு உள்பட பலர் கலந்துெகாண்டனர். கூட்டத்தில், காலை உணவுத்திட்டத்தை தினமும் இரு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வீதம் பார்வையிட்டு ஆலோசனை வழங்குவது. புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்திற்கு
பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவது.
பள்ளி செல்லாக்குழந்தைகளை கணக்கெடு்த்து பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளியில் சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆசிரியர் அனிதா நன்றி கூறினார்.