தூத்துக்குடி யூனியன் 3-வது வார்டு இடைத்தேர்தல் 9 பேர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி யூனியன் 3-வது வார்டு இடைத்தேர்தல் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2022-06-27 15:14 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 30.4.2022 வரை ஏற்பட்ட காலியிடங்களான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 3 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 23 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

தூத்துக்குடி யூனியன் 3-வது வார்டுக்கான வேட்பு மனு தாக்கல் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இந்த வார்டில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த வேட்பு மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பரிசீலனை செய்யப்படுகின்றன. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடத்தப்படும். இதில் பதிவான வாக்குகள் 12.07.2022 அன்று காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து எண்ணப்படுகின்றன

Tags:    

மேலும் செய்திகள்