சர்வதேச சிலம்ப போட்டியில் தூத்துக்குடி மாணவர் வெற்றி

சர்வதேச சிலம்ப போட்டியில் தூத்துக்குடி மாணவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2022-06-08 13:23 GMT

தூத்துக்குடி:

நேபாளத்தில் உள்ள போக்கரா பகுதியில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு பென்சிங் சுந்தர்ராஜ் மகன் பியர்சன் (வயது 9) என்பவர் கலந்து கொண்டு விளையாடினார். இந்த போட்டியில் பியர்சன் சிறப்பாக விளையாடி முதல் பரிசு வென்று உள்ளார். அவருக்கு நேபாள நாட்டு அரசவை அதிகாரிகள் சுழற்கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினர்.

இதில் தமிழகத்தில் இருந்து 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், போலீசார் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்