தூத்துக்குடி வக்கீல் கொலை: மதுரை கோர்ட்டில் 3 பேர் சரண்
தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கில் மதுரை கோர்ட்டில் 3 பேர் சரணடைந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். வக்கீல். இவர் நேற்று முன்தினம் பட்டப்பகலில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த வேல்முருகன் (வயது 25), நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கீழகடையத்தை சேர்ந்த ராஜரத்தினம் (25), நெல்லை பெரும்பேடு கம்மவார் பாளையத்தை சேர்ந்த இலங்கேஸ்வரன் (30) ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.