தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல்
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி நடக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்து
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பிறகும் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தலின் போதும், குறைவெண் வரம்பின்மை, கோர்ட்டு வழக்கு மற்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிய காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல் மற்றும் பதவி நீக்கம் காரணமாக 31.7.22 வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தல் நடத்துவதற்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
6-ந் தேதி
அதன்படி சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு மறைமுக தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு சார்பு செய்வதற்கான கடைசி நாள் 28.8.22 என்றும், மறைமுக தேர்தல் நாள் 6.9.22 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த செல்வக்குமார் பதவி விலகியதால் அந்த பதவி காலியாக இதனால் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு 6-ந் தேதி மதியம் 2.30 மணிக்கும், காமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர், பிச்சிவிளை பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு காலை 10.30 மணிக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது.