செயற்கை சூரிய ஒளி

ஆலிவ் கிரியேட்டிவ் லேப் எனும் நிறுவனம் கருவியிலுள்ள சென்சார் மூலம் சூழலின் ஒளியமைப்பை கிரகித்து அதனை விளக்குக்கு மாற்றினால், விளக்கு அச்சூழலின் வெளிச்சத்தை ஆறு மணி நேரத்திற்கு ஒளிரவிடுகிறது.

Update: 2023-05-07 12:55 GMT

மாலை மயங்கும் அந்தி நேரத்தில் மலையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தின் கடைசி ஒளியையும், அதிகாலை கடற்கரை மணலில் இதமான குளிரில் கதகதப்பான சூழலில் சூரிய உதயத்தையும் தரிசிக்கிறோம்.

சூரிய ஒளியில்லாமல் நம் வாழ்க்கை தொடங்குவதும் இல்லை; முடிவதுமில்லை. அதே சூரிய ஒளியை அறையில் கொண்டு வர முடிந்தால் எவ்வளவு ரம்மியமாக இருக்கும்? சவால்களை சாத்தியப்படுத்துவதுதானே அறிவியலின் நோக்கமே. இந்த வேலையை தோளில் போட்டுக்கொண்டு நிறைவேற்றிஇருக்கிறது ஆலிவ் கிரியேட்டிவ் லேப் எனும் நிறுவனம்.

எப்படி? தனது சன் மெமரீஸ் எனும் விளக்கு மூலமாகத்தான்.

விளக்கோடு தரப்படும் உடலில் அணியும் கருவி மூலமாக கடற்கரை, மலை, அருவி என பல்வேறு இடங்களின் ஒளியைப் பதிவு செய்து, அதனை ஆர்.ஜி.பி. எல்.இ.டி விளக்குக்கு மடை மாற்றினால் போதும். அணியும் கருவியிலுள்ள சென்சார் மூலம் சூழலின் ஒளியமைப்பை கிரகித்து அதனை விளக்குக்கு மாற்றினால், விளக்கு அச்சூழலின் வெளிச்சத்தை ஆறு மணி நேரத்திற்கு ஒளிரவிடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்