விளிம்புநிலை மக்களைச் முன்னேற்ற இந்த அரசு தொடர்ந்து உழைக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

விளிம்புநிலை மக்களை முன்னேற்ற இந்த அரசு தொடர்ந்து உழைக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-03 06:22 GMT

சென்னை,

நாமக்கல் சிலுவம்பட்டி அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமியோபதி டாக்டர் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டில் டீ குடித்தார்.அதன் பின்னர் அங்குள்ள சிறுவர்கள், மக்கள் முதல்-அமைச்சர் உடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"சிலுவம்பட்டி அருந்ததியினர் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் மாணவ மாணவியர் பலரும், மருத்துவம், பொறியியல், முனைவர் பட்டங்கள் போன்ற உயர்கல்வி வாய்ப்புகளையும், அரசுப்பணிகளையும் பெற்றுள்ளது மனநிறைவளிக்கின்றது.

விளிம்புநிலை மக்களை முன்னேற்ற இந்த அரசு தொடர்ந்து உழைக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்