திருவிளையாடல் புராணம் தொடர் சொற்பொழிவு

ராணிப்பேட்டையில் திருவிளையாடல் புராணம் தொடர் சொற்பொழிவு 4 நாட்கள் நடக்கிறது.

Update: 2022-07-06 18:39 GMT

திருவாடுதுறை ஆதீன சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மையம் மற்றும் வேத பவன் டிரஸ்ட் இணைந்து நடத்தும் திருவிளையாடல் புராணம் தொடர் சொற்பொழிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.40 மணி வரை ராணிப்பேட்டை வேதபவனில் நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு மையத்தின் அமைப்பாளர் ரகுபதி வரவேற்புரை ஆற்றுகிறார். இயக்குனர் சபா சண்முகசுந்தரம் முன்னிலை வைக்கிறார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். பேராசிரியர் சிவசண்முகம் திருவிளையாடல் புராணம் குறித்து உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மைய பொறுப்பாளர் ரகுபதி தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்