திருவிளக்கு பூஜை
தேவகோட்டை அருகே கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் உள்ளகரந்தை மகா காளியம்மன், குதிரை மகா கருப்பர், பறவை சித்தர், பெத்தாயி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக வருடாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.திருவிளக்கு பூஜையில் பெண்கள் மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் குடும்பத்தில் சகல சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கவும் வேண்டி கொண்டனர். தேவகோட்டை, கோட்டூர் நைனார்வயல், பெரியகாரை, கள்ளிக்குடி மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைகள் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.