ஓசூர்
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதி மண்டபத்தில் பாரதிய இந்து சேவா பரிவார் அமைப்பின் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இசை இசைத்தும், பாடல்கள் பாடியும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையின்போது, பெண்கள் வேத மந்திரங்கள் முழங்க விளக்கு ஏற்றி பூஜை நடத்தி வழிபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.