துர்க்கை அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கிருஷ்ணகிரியில் துர்க்கை அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-02-03 18:45 GMT

கிருஷ்ணகிரி போலீஸ் குடியிருப்பில் உள்ள முத்துவிநாயகர் துர்க்கை அம்மன் கோவிலில், தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையைெயாட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்