பிரியாவிடங்கேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

மேலையூர் பிரியாவிடங்கேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-08-17 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகார் அருகே மேலையூர் பிரியா விடங்கேஸ்வரர் கோவிலில் உலக நன்மை, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையை விசுவ இந்து பரிசத் மண்டல செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மந்திரங்கள் ஓதிட பெண்கள் திருவிளக்கிற்கு பூஜை செய்தனர். பூஜையின் முடிவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பெண்களுக்கு மங்கள பொருட்கள் அடங்கிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர்கள் சண்முகம் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்