பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு தலைமை குருசாமி மோகன் 18-ம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார். இதையடுத்து சாமிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வல்லபை மஞ்சமாதா அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் வில், அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. நவராத்திரி தினத்தையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை வல்லபை அய்யப்ப சேவை நிலையம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.