கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை
திருவத்திபுரம் நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
செய்யாறு
திருவத்திபுரம் நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசியக் கொள்கை அடிப்படையில் கழிவுகளை அகற்ற விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கழிவு நீரை அகற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் 2 ஆண்டுகள் செல்லுபடியாகும் உரிமம் வழங்கப்படுகிறது. உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய வேண்டும். செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் நகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்படும். மேலும் வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.