திருவண்ணாமலை: செங்கம் அருகே, கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து- 7 பேர் உயிரிழப்பு.!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-10-15 05:08 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் பெங்களூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரும், எதிரே வந்த லாரியும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பெண் ஒருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக செங்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்