திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி குமரி மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனரா? என போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், ெரயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 48 கடலோர மீனவ கிராமங்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
-----------