குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம்

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-01 18:45 GMT

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது.

திருவிழா

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி - அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெற்று வருகின்றன. மேலும் காலை 9-30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

ேதரோட்டம்

திருவிழாவின் 5-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 8-45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

முதலில் விநாயகர் தேர், அதை தொடர்ந்து முருகன் தேர், பின்னர் நடராஜர் தேர், அதன் பிறகு குற்றாலநாத சுவாமி தேர், இறுதியாக குழல்வாய்மொழி அம்மை தேர் ஆகிய 5 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. இந்த 5 தேர்களும் ரத வீதிகளில் சுற்றி நிலையத்தை அடைந்தன.

திரளான பக்தர்கள்

இதில், தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 4-ந் தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கவிதா, உதவி ஆணையர் கண்ணதாசன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்