திருவாடானை யூனியனை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்

மழை இல்லாததால் 26 ஹெக்டர் ஏக்கர் நெற்பயிர் கருகி விட்டது. எனவே திருவாடானை யூனியனை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Update: 2023-01-09 18:45 GMT

தொண்டி,

திருவாடானை யூனியன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் தேளூர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு செயலாளர் வெள்ளையபுரம் பரக்கத் அலி முன்னிலை வகித்தார். அனைவரையும் மங்களக்குடி ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திருவாடானை யூனியனில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால் சுமார் 26 ஆயிரத்து 500 ஹெக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் முழுமையாக கருகிவிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர்.

எனவே தமிழக அரசு திருவாடானை யூனியனை வறட்சி பகுதியாக அறிவித்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதுடன் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகையையும் உடனே கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருவாடானை யூனியனில் வறட்சி நிவாரண பணிகளை உடனே தொடங்கிட தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை யூனியனில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பு பொருளாளர் டி. நாகனி இந்திரா ராஜேந்திரன், துணைச்செயலாளர் கூகுடி சரவணன், ஊராட்சி தலைவர்கள் கோடனூர் காந்தி, பனஞ்சாயல் மோகன்ராஜ், தளிர்மருங்கூர் ராமநாதன், அரும்பூர் சசிகுமார், கட்டவிளாகம் ஆறுமுகம், திருவெற்றியூர் கலா முத்தழகு, கண்ணாத்தாள் ஜெயராமன், சிறுகம்பையூர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்