ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் 28-ந் தேதி நடக்கிறது

Update: 2023-03-24 12:34 GMT

திருத்தணி முருகன் கோவில் பணியாளர்கள் நேற்று திருத்தணி ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் 29 உபகோவில்களில் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு கடந்த, 2017 ம் ஆண்டு 7-வது ஊதியக்குழு அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என இந்து அறநிலைத்துறை ஆணையர் மற்றும் அரசும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் தவிர மீதமுள்ள அனைத்து கோவில்களிலும் 7-வது ஊதிய உயர்வு வழங்கிவிட்டனர். எனவே, எங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே எங்கள் உண்ணாவிரதம் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்