மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு

Update: 2022-07-09 16:20 GMT


திருப்பூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், அவர்களின் குடும்பத்துடன் போதிய நேரத்தை செலவிட்டு, மனஅழுத்தம் இல்லாமல் பணியில் சிறப்பாக செயல்பட மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கு நேற்று காலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தொடங்கிவைத்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பரணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மன அழுத்தம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்து விளக்கினார். பெண் போலீஸ் அதிகாரிகள், போலீசார் தினமும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் 94 பேர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்