திருநாவுக்கரசர் எம்.பி. உள்பட 244 காங்கிரசார் மீது வழக்கு
திருநாவுக்கரசர் எம்.பி. உள்பட 244 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியினர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்ற திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உள்பட 244 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.