திருமழிசை புறநகர் பேருந்து நிலைய பணிகள் - ஆர்டிஐ-யில் வெளியான தகவல்

திருமழிசை புறநகர் பேருந்து நிலையம் பணிகள் டிசம்பர் மாதம் முழுமை பெறும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Update: 2023-09-15 16:02 GMT

சென்னை,

சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 486.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் எப்போது நிறைவு பெறும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.

திருமழிசை பேருந்துநிலைய பணிகள் டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என ஆர்டிஐ பதில் அளித்துள்ளது. கூடுதல் தளம், கழிப்பிட வசதி, குளிர்சாதன வசதி போன்ற கூடுதல் பணிகள் திட்டமிடப்பட்ட பட்டுள்ளதால் இன்னும் 50 சதவீத பணிகள் முடிக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருமழிசையும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் ஒரே நேரத்தில் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்