திருமாவளவன் பிறந்தநாள் விழா: கட்டுரை போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி
ஆறுமுகநேரியில் திருமாவளவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 61-வது பிறந்த நாள் விழா ஆறுமுகநேரி ஐ.என்.டி.யு.சி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவைஒட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற்றது இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆறுமுகநேரி நகர செயலாளர் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல செயலாளர் தமிழினியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டாரவி, சமூக நீதிப்பேரவை மாநில தலைவர் அகமது சாஹிப், கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் தமிழ் குட்டி, காயல்பட்டினம் நகர செயலாளர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.