திருமானூர் ஒன்றியக்குழு கூட்டம்
திருமானூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், ஜாகிர் உசேன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முதலில் மன்ற பொருள் மற்றும் செலவினங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான திட்டங்கள் குறித்து கோரிக்கைகளை வைத்தனர். இதில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.