திருமானூர் ஒன்றியக்குழு கூட்டம்

திருமானூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-23 18:30 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சுமதி அசோக் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற பொருள் மற்றும் அலுவலக செலவினங்கள் வாசிக்கப்பட்டன. இதில் துணை தலைவர் அம்பிகா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா, மலர்க்கொடி, செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தங்கள் வார்டில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்