வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சன கலச விழா
மேல்புதுப்பேட்டை வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சன கலச விழா நடைபெற்றது.
வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகர் பகுதியில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி 5-வது சனிக்கிழமையை முன்னிட்டு யாக பூஜை மற்றும் திருமஞ்சன கலச விழா நடைபெற்றது. ஜலகுரு பழனி சுவாமிகள் தலைமை தாங்கி, தத்வார்ச்சனை, தீபாராதனை செய்தார். பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக மூலவரை தரிசனம் செய்தனர்.
மேலும் கோவிலின் மேற்கு வாசல் கோபுரத்திற்கான திருப்பணிக்கு எடுத்து வந்திருந்த செங்கல்களை மூலவரின் பாதத்தில் வைத்து அருளாசி பெற்றனர். கோவில் நிர்வாகி கூறுகையில், வருகிற புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் திருப்பதி திருமலை லட்டுக்கு இணையான சுவையுடன் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி அறங்காவலர் வாசுதேவன் சுவாமிகள் செய்திருந்தார்.