திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

திருவள்ளுவர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாதனை நிர்வாகிகள் பாராட்டு

Update: 2022-09-09 17:03 GMT

திருக்கோவிலூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் நடந்து முடிந்த 2018-2021-ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக தேர்வில் வரலாற்று பாடத்தில் மாணவி ரஞ்சிதா முதலிடம் பெற்றுள்ளார். கணினி பயன்பாட்டில் மாணவி சாயாதேவி 6-வது இடத்தையும், நுண்ணுயிரியல் பாடப்பிரிவில் மாணவி பிரேமா 7-வது இடத்தையும் பெற்றுள்ளார். கடந்த ஏப்ரல்-மே(2022) மாதத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வில் வணிகவியல் துறையில் மாணவர் வி.கணேசன் காஸ்ட் அக்கவுண்டிங் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சிறப்பு சேர்த்தார். சாதனை புரிந்த மாணவ-மாணவிகளை கல்லூரி தலைவர் ஆர்.செல்வராஜ் பாராட்டி பரிசு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத்தலைவர் முஸ்டாக்அஹமத், தாளாளர் பழனிராஜ் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்