திருக்குறுங்குடி நம்பி கோவிலில் உறியடி திருவிழா

திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நேற்று உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-09-16 20:26 GMT

ஏர்வாடி;

திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நேற்று உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நம்பி கோவில்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் சனிக்கிழமை மற்றும் தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கமாகும். மேலும் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையன்று கோகுலாஷ்டமியை சிறப்புக்கும் வகையில், வனப்பகுதியில் நம்பியாற்று கரையையொட்டி பழமை மாறாமல் கண்ணன் பாடல்கள் பாடியவாறு உறியடி உற்சவம் விமரிசையாக நடை பெறுவது வழக்கமாகும்.

அதன்படி நேற்று கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மதியம் 12 மணிக்கு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடந்தது.

உறியடி திருவிழா

இதனை தொடர்ந்து மதியம் 2.50 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. உறியில் வெண்ணெய், முறுக்கு, சீடை உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டி ருந்தது.

இதையடுத்து கருட சேவை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காலை, மதியம் அன்னதானம் நடந்தது.

வனப்பகுதியில் திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனத்துறையினரும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் திருக்குறுங்குடி, களக்காடு, ஏர்வாடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜண்ட் பரமசிவன் மேற்பார்வையில் கண்ணன் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்